
மூதூர் பகுதியில் பணத்திற்கு சூது விளையாடிய நால்வருக்கு ஒரு மாதம் கட்டாய சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணத்திற்கு சூது விளையாடிய நால்வருக்கு ஒரு மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று (8) உத்தரவிட்டார்.
செல்வநகர்,தோப்பூர்,மூதூர் பகுதியைச் சேர்ந்த 58,40,38,மற்றும் 28 வயதுடைய நால்வருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
சந்தேக நபர்கள் மூதூர் பகுதியில் பணத்திற்கு சூது விளையாடிய போது மூதூர் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைத்த தகவலுக்கமைய பத்தாயிரம் ரூபாய் பணத்துடன், இரண்டு ஆண்களையும் இரண்டு பெண்களையும் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்