
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தனக்கு விதிக்கப்பட்ட 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றை சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்தனர்.
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன், இரண்டரைக் கோடி ரூபா அபராதம் செலுத்தத் தவறின் 9 மாதங்கள் சிறைத்தண்டனையும் மேலும் பாதிக்கப்பட்ட வர்த்தகருக்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைதண்டனையும் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.