
கொழும்பு,ஜுன் 08
நிதியமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிமரசிங்க முன்வைத்த குறை நிரப்புப் பிரேணைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
695 பில்லியன் ரூபா பெறுமதியான குறை நிரப்புப் பிரேணையை புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்தார்.
மீண்டெழும் செலவினங்களாக 395 பில்லியன் ரூபாவும், மூலதனச் செலவினமாக 300 பில்லியன் ரூபாவும் குறை நிரப்புப் பிரேணையின் ஊடாக செலவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான நிதியாண்டிற்காக இந்த குறை நிரப்புப் பிரேணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.