மே 9 சம்பவம்: மிலான் உட்பட 13 பேருக்கு பிணை

கொழும்பு,ஜுன் 8

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கடறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 13 பேருக்கு பிணை வழங்கப்பட்டது.

மே 9 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *