
கொழும்பு,ஜுன் 08
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி இன்று (08) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை (09) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இன்று இரவு 12 மணி முதல் நாங்கள் அனைவரும் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளோம். அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்படும் என்றும் தெரிவித்தனர்.