
2022 ஜூன் 08 முதல் மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று தெரிவித்திருந்தது.
குறித்த சங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிசிறப்பு
வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.




