இந்திய தமிழக அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள்
கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இன்று (08) வழங்கி வைக்கப்பட்டது.
இந்திய தமிழ்நாட்டு மக்களினால் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்ட உலர் உணவுப்பொருட்களின் ஒரு தொகை உலர் உணவுப்பொதிகள் இன்று (08) மாலை கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளுக்கு திருகோணமலை மாவட்ட அரச அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
உலர் உணவுப்பொதிகளை இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளை இந்திய தமிழ்நாட்டு மக்கள் இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்ததன் பிரதிபலனாக இவ்வுலர்வுணவுப்பொருட்களின் தேவை வேண்டப்படும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுளில் இணங்காணப்பட்ட குடும்பங்களுக்கு இப்பொருட்களை கொண்டு சேர்க்க செயற்பட்ட அரச அதிபர் உட்பட சக உத்தியோகத்தர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக துணைத்தூதுவர் தெரிவித்தார்.
இக்கட்டான கட்டத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு உதவ வந்தமை குறித்தும் திருகோணமலை மாவட்டத்திற்கு 5000க்கு மேற்பட்ட உலர் உணவுப்பொதிகளை வழங்கியமை குறித்து இந்திய மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அரச அதிபர் இதன்போது தெரிவித்தார்.
இவ் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். மொஹமட் கனி, கிண்ணியா உதவி பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.





பிற செய்திகள்
- மீசாலையில் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலி அறுப்பு
- மின்சார இணைப்பு பெறாத வறிய குடும்பங்களுக்கு இலவச மண்ணெண்ணெய்!
- ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம்பிடித்த பிரபலர் காலமானார்!
- மனித கற்பனையை நிஜமாக்கிய டிராகன் பிளட் மரம்!
- இலங்கையிலிருந்து எவரும் சட்டவிரோதமாக வெளியேற வேண்டாம்! பிரதமர் வேண்டுகோள்!
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்