முன்பள்ளிகளை இந்த மாதம் திறக்கத் திட்டம் – கல்வி அமைச்சு!

நாடளாவிய ரீதியில் முன் பள்ளிகளை இம்மாதம் மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மஹரகமயில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாடசாலைகளை மீண்டும் திறக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம் தற்போது மிகவும் திறம்பட நகர்கிறது என தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டுதல்களின்படி பாடசாலை வளாகத்தில் தொற்று நீக்கம் செய்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்த பின்னர் பாடசாலைகள்  படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அனைத்து அரசு அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாநில அமைப்புகள் தங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply