பொருளாதார புத்துணர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நேற்று கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், மூதூர் தொகுதியில் உள்ள 83 கிராமசேவகர் பிரிவுகளும் எதிர்வரும் வரவு, செலவுத் திட்டத்தில் ஒடுக்கப்படுகின்ற நிதிக்காக முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இன, மத, கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு, நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் தலா 30 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களையும் கிராம மட்டத்தில் மக்கள் அறிந்து கொண்டு, இதற்கான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுடைய கிராமம் வாழ்வாதாரம், பொதுக்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி ஆகியவற்றில் மறுமலர்ச்சி பெறும் என நாடாளுமன்ற உறுப்பினரான கபில நுவான் அத்துகோரல தெரிவித்தார்.
மேலும், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் என்பது இப்போது தோன்றியது அல்ல. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இன முரண்பாடுகள் இருந்ததுதான். அதற்கு முன்னரும் இருந்தது தான். இந்த நிலையில் அதற்கான தீர்வுகள் அந்தந்தக் காலப் பகுதிக்குள் கலந்துரையாடல்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட இருக்கின்றன. எனவே இப்போதும் முரண்பாடுகளை பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்.
2015 ஆம் ஆண்டு நான் மாத்திரமே மஹிந்த அணியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன். அதேபோன்று 20 ஆம் ஆண்டிலும் நான் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டு இருக்கிறேன். இதற்குக் காரணம் வன்னி மாவட்டத்தில் 65 வீதமான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அணிக்கு வாக்களித்தமையாகும். இந்த நிலை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற வேண்டும். கட்சி மதமோ மார்க்கமோ அல்ல என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இங்கு தெரிவித்தார்.
இக் கலந்துடையாடலில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கபிலன் நுவன் அத்துகோரல, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரசிங்க, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஆரியபதி கலபதி, நிமல் காமினி மற்றும் பொது ஜன பெரமுன அரசியல் முக்கியஸ்தர்களான இப்ராஹிம் சதாத், எம்.எஸ்.உவைஸ், ஏ. எஸ். எம்.சப்ரி, ஆர்.எச். இம்ஸாமுள் ஹக் ஆகியோர் கலந்து கொண்டனர்.