இளவாலை பொலிஸாரால் மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கிவைப்பு

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இளவாலை பொலிஸாரால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு, இளவாலை பொலிஸ் நிலையத்தில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நடைபெற்றுள்ளது.

இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக பத்மராஜவின் தலைமையில், இளவாலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக உதவி பொலிஸ் அத்தியட்சராக பதவியேற்ற சித்திரானந்த கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply