அரசியலில் களமிறங்கும் ரோஹித்த ராஜபக்ச?

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர், வடமேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்பை அடிப்படையாக கொண்டே ரோஹித்த ராஜபக்ச சில சந்தர்ப்பங்களில் குருணாகல் மாவட்ட நடவடிக்கைகளில் தலையீடுகளை செய்து வருவதாகவும் அண்மையில் குருணாகல் மாவட்டத்திற்கு காண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், ஒரு வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை நிர்வத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார் என்றும் தெரியவருகின்றது.

மேலும், இதுதொடர்பில் குருணாகல் மாவட்டத்தில் சில கருத்து வேறுபாடான நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும், மகிந்தவின் இளைய புதல்வரின் அரசியல் பிரவேசம் குறித்த அவரது குடும்பத்தினரோ அல்லது பிரதமர் தரப்போ உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *