கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி ஆயிரத்திற்கும் அதிகமானோர் அக்லாந்து நகரில் போராட்டம்

நியூஸிலந்தில் இன்று 27 பேருக்கு டெல்டா வகைக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அக்லாந்து நகரில் கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி ஆயிரத்திற்கும் அதிகமானோர் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மாதங்களாக அந்நகரில் முடக்கநிலை அமுலில் உள்ள நிலையில் முடக்கநிலை நீடிக்கப்படுமா என்பது பற்றி எதிர்வரும் திங்கட்கிழமை முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.

அக்லாந்தில் அண்மைக்காலமாக நாள்தோறும் சராசரியாக 8 முதல் 45 நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்ற நிலையில் வெல்லிங்டன், கிரைஸ்ட்சர்ச் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நியூஸிலந்தில் 46 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை காரணமாக கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply