இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியா மாங்குளம் பகுதியில் 10 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாடசாலை சீருடையுடன் மலசலக்கூடத்தில் வைத்து இருமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாகவும், இச் சம்பவத்தின் பின்னர் பாடசாலைக்கு சென்று வகுப்பாசிரியரிடம் கூறியதாகவும், அதிபருக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் மாணவி நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியென தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்றம் 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணையும்,
4 லட்சம் நஷ்ட ஈடும் கட்டத்தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டணையும், 20 ஆயிரம் தண்டப்பணமும் கட்டத்தவறும் பட்சத்தில் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டணையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்