மட்டக்களப்பில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு, கிண்ணையடி, சுங்கான்கேணி, கும்புறுமூலை, விநாயகபுரம், புதுக்குடியிருப்பு, கல்மடு ஆகிய கிராமங்களில் வசிக்கும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்;கப்பட்டுள்ளன.

சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் அனுசரனையில் கனடாவில் வசிக்கும் சிவகுமார் இராசையாவின் பிறந்த நாளை முன்னிட்டு இக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது, வறிய மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு கழக நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.சேகர், அகில இலங்கைக்கான அங்கத்துவ பொறுப்பாளர் அ.வாசுதன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply