புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவீதம் புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர்.

இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன்

டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளை பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்தனர். அவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து கொடுக்கப்பட்டதில் குணமடைந்துள்ளனர்.

பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும். ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்றும் டோஸ்டர்லிமாப் மருந்தை அனுசரணை செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *