அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் முதலாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதி சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான அஜித் ராஜபக்சவினால் இன்று(வியாழக்கிழமை) குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கையில் 21.11.2020 முதல் 21.09.2021 வரை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 30 அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச்.டி.ஈ.ஜனகாந்த சில்வா இந்த அறிக்கையைப் பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான அஜித் ராஜபக்சவிடம் நேற்று கையளித்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *