
கொழும்பு, ஜுன் 9
உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10 உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷவும் ஒருவராவார். பெஸ்ரீசில் ராஜபக்க்ஷவின் இராஜினாமாவால் ஏற்படவுள்ள வெற்றிடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஒருவரை நியமிப்பது தொடர்பில் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, பெசிலின் வெற்றிடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.