
நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்துள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் சுமார் 1000 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
2021ஆம் ஆண்டு முழுவதும் 14,312 கொள்ளைகள் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்றன.
எனினும் 2022 முதல் நான்கு மாதங்களில் மாத்திரம், 4,853 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 2,224 வீடு உடைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் கடந்த நான்கு மாதங்களில் 948 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதுடன் மட்டுமல்லாமல் நாட்டில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, வீடு உடைப்பு போன்றவை வேகமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டை விட திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸாரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
திருட்டு சம்பவங்களின்போது 50 கோடிக்கு மேல் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டன.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்