திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோவில் கிராமத்தில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதிகளை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அப்பகுதி மக்கள் கோசங்களில் ஈடுபட்டார்கள்.
கோவில் கிராமம் பகுதிக்கு பொறுப்பான கிராம அதிகாரி தனக்கு தேவையானவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் மாத்திரமே பெயர் பட்டியலை தயாரித்து இந்திய அரசின் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றார்.
இந்தியா இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கவே நிவாரணங்களை வழங்குகின்றது. ஆனால் இங்கே அது நடைபெறுவது இல்லை, சமூர்த்தி உள்ளவர்கள் இருக்கு ஏனையோருக்கு வழங்கப்படுகின்றது.
அப்பகுதி கிராம அதிகாரியை மாற்றுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்