
இந்த ஆண்டின் இறுதி வரை அரிசி தட்டுப்பாடு இருக்கும் ஆனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரசி தேவை இருக்கும் என கமநல சேவைகள், வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை தற்போது மூன்று இலட்சத்து முப்பதனாயிரம் மெற்றிக் டொன் அரசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே மக்கள் எவரும் அரசி தட்டுப்பாடு தொடர்பில் வீணாக குளப்பமடைய வேண்டாம் என தெரிவித்தார்.
மக்கள் தற்போது அரிசி நெல்லை பதுக்கி வைக்கப்பார்க்கிறார்கள். ஆனால் பதுக்கி வைக்கப்படுபவை சில மாதங்களில் பழுதடைந்து விடும் என அறியாதவர்களே அவ்வாறு பதுக்கி வைக்கின்றனர்.
அத்தோடு மக்கள் அரசி தட்டுப்பாடு ஏற்படும் என்று அரிசியை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்