இன்று அதிகாலை முதல் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்க ஆயிரத்துக்கு மேற்பட்ட பாவனையாளர்கள் காத்து நிற்கும் நிலையில் உள்ளனர்.
மஸ்கெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடந்த 26ம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. அதற்கு பின்னர் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை.

இப்பகுதியில் எரிவாயு இல்லை, மண்ணெண்ணெய் இல்லை. பாவணையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் நகர் வாழ் மக்கள் பெருந்தோட்ட மக்கள் இன்று மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நின்று கொண்டு இருந்தனர்.
இதையடுத்து, மண்ணெண்ணெய் வழங்கப்படாததால் இன்று காலை 10 மணிக்கு எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.

ஆர்ப்பாட்ட காரணமாக அட்டன், நோட்டன் வீதி மூடப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அவ்விடத்திற்கு விரைந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார மக்களிடம் வாகனங்கள் போக வழி செய்து கொடுத்தார்.

இது குறித்து எரிபொருள் நிரப்பும் நிலைய முகாமையாளரிடம் கேட்ட போது, கடந்த மாதம் 26 ம் திகதி எமது எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு 3300 லீட்டர் மண்ணெண்ணெய் வந்தது. அதை மக்களுக்கு வழங்கியுள்ளோம். நாளை மேலும் 6600 லீட்டர் மண்ணெண்ணெய் கொட்டகல இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனம் அனுப்புவதாக கூறி உள்ளனர். மண்ணென்ணை கிடைக்கும் பட்சத்தில் சகலருக்கும் பிரித்து வழங்கபட உள்ளது என அவர் கூறினார்.

பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்




