தூரப் பகுதியிலிருந்து மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னாள் இன்று வியாழக்கிழமை (09) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையின் அதிகரிப்பு, பிராயாணத்தின்போது ஏற்படும் அசௌகரியம் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து இடம்பெற்ற இவ் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் தமது பிரதேச பாடசாலைகளுக்கான இடமாற்றத்தையோ அல்லது தற்காழிக இணைப்பையோ பெற்று தருமாறு வழியுறுத்தியிருந்தனர்.
இதன்பின் ஆப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பேரணியாக மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு சென்று வலயக்கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தமது கஷ்டத்தையும் ஆதங்கத்தையும் குறிப்பிட்டனர்.
இதன்பின் மகஜரை பெற்றுக் கொண்ட மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் கருத்து தெரிவிக்கையில்.
ஆசிரியர்களினால் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் என்னிடம் கையளிக்கப்பட்டது. மூதூர் வலயக்கல்வி அலுவலகப் பிரிவில் செய்யக் கூடிய விடயங்களை என்னால் செய்ய முடியும்.
ஆசிரியர்களின் இடமாற்றம் தற்காலிக இணைப்பு சம்பந்தமாக என்னால் எதுவும் செய்ய முடியாது. இது தொடர்பாக மாகாண கல்வித் திணைக்களத்திற்கு என்னால் மகஜர் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.






பிற செய்திகள்
- மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடியும்! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
- 21 குறித்து சிவில் சமூக தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் பேச்சு!
- அவுஸ்ரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்
- மக்கள் கூட்டத்தின் மத்தியில் வேகமாக செலுத்தப்பட்ட கார்: ஜேர்மனியில் சம்பவம்
- மின்கட்டணத்தை உயர்த்துவதை விட உற்பத்தி செலவைக் குறைப்பதே நோக்கமாகும்! – எரிசக்தி அமைச்சர்
- இந்திய அரசால் வழங்கப்பட்ட உணவுப் பொதிகளை வழங்குவதில் பாரபட்சம்!
- கொரியாவுக்கு படையெடுக்கும் இலங்கை இளைஞர்கள்!
- நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் பசில் ராஜபக்ஷ
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்