
கொழும்பு, ஜுன் 09
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தல் மற்றும் ஆலோசனைகளுடன் செயற்பட்டு வருகின்ற இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கடந்த 5 மாதச் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விபரிக்கப்பட்டதுடன் மேலதிக ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.
கடற்றொழில் அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.கடந்த 5 மாதங்களில் கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் 8 வீதம் அதிகரித்துள்ளமையை புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது