யாழில் சிரமதான பணி முன்னெடுப்பு(படங்கள் இணைப்பு)

யாழில் இன்று சுற்றுச் சூழல் தின வாரத்தினை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சூழல் பிரிவினால் யாழ் மாநகரசபையின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்றிருந்தது .

சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் , சூழலை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் இளைய சமூகத்தினருக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சூழலை சுத்தம் செய்யும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன

அந்த வகையில் யாழின் முக்கியமான பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மரங்கள் நடப்பட்டன .

இதற்கமைய நாவலர் வீதியின் இரு மருங்கையும் சுத்தம் செய்தமை ,பண்ணை கடற்கரையின் சாலை ஓரங்களில் இருந்த பிளாஸ்ட்டிக் கழிவுகள் ,கண்ணாடி கழிவுகள் போன்ற செயல்பாடுகள் மூலம் சுற்றுசுழல்தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இந்த செயற்பாட்டில் வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்,ஊழியர்கள் மற்றும் மாநகரசபை பணியாளர்கள் என பலரும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *