
கொழும்பு, ஜுன் 09
மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.
ஜனாதிபதி மற்றும் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி தூதுவர்களிடம் விளக்கினார்.
தற்போதைய நிலைமையைத் தீர்ப்பதில் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி , இதுவரை அந்நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.