சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின் விலைகள் அடுத்த வாரம் முதல் 50 தொடக்கம் 75 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை விவசாய அமைச்சில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடும் சட்ட வரைவை அடுத்த வாரம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
அரிசி விலையும் நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
நாட்டில் சுமார் 80 சதவீத மக்கள் உட்கொள்ளும் நாட்டு அரிசியின் விலை 100 ரூபாயை விட குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.