தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விட்டால் புலம்பெயர் தேசம்,நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துளளார்.
நாடளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்வார்கள்.ஆனால் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற காணி அபகரிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும்.நாடு தற்போது மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டு இருக்கிறது.அதற்கு புலம்பெயர் தேசம் கைகொடுக்கத் தயாராக உள்ளது.ஆனால் அரசு தமிழ் மக்கள் மீது தொடர்கின்ற அழிவான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
கடந்த சர்வக்கட்சி மாநாட்டின்போது, இந்த விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நேரத்தில், இன்றும் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றமை தமக்கு தெரியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனினும் காணி அபகரிப்புக்கள் தற்போதும் இடம்பெறுகின்றன.
மேலும் வடக்கில் காற்றாலை மையங்களை அமைக்கும் போது , அதிலிருந்து கிடைக்கும் இலாபங்களில் ஒரு பங்கு, வடக்கின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்றார்.
பிற செய்திகள்