இந்த பதிவை வாசிக்கும் பலர் என்னை இனவாதி எனலாம், அல்லது கல்முனையை வைத்து நான் அரசியல் செய்கிறேன் என்று கூப்பாடு கூட போடலாம் ஆனாலும் நான் விமர்சனங்களை கடந்தவன் என்கின்ற வகையில் எமது் நிலத்தையும் இருப்பையும் பாதுகாக்கின்ற கடமையும் பொறுப்பும் எனக்கும் உண்டு , ஒரு சமூகம் வாழ வேண்டும் என்பதற்காக இன்னொரு பூர்வீக இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கவோ, அல்லது இல்லாதொழிக்கும் செயற்பாடுகளையோ ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல சில அரசியல்வாதிகளில் சூழ்ச்சிகளையும் கண்டும் காணாது கடந்து செல்லவும் முடியாது.
எமது நாடு இன்று பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாட்டோடு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் இரு மடங்கு எகிறி நிற்கிறது.
மண்ணெண்ணெய் வரிசையில் அன்னையும் டீசல் வரிசையில் தந்தையும் பெற்றோலுக்கும் அண்ணனும் சீனிக்கும் மாவுக்கும் தம்பியும் தங்கையும் வரிசையில் இன்று காத்துக்கிடக்கின்றனர்,
எதிர்வரும் நாட்களும் இன்னும் மோசமாகுமென பலதரப்பாலும் எச்சரிக்கப்டுகின்றது.
எமது வயிற்றுப்பசிக்காக உணவுக்கும் பொருளுக்கும் நாம் அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கையில் இன்னொரு பகுதியில் குறுகிய அரசியல் இலாபம் கொண்ட சிலரால் சத்தமின்றி கடந்த 45 நாட்களுக்குள் பல்வேறு விடயங்கள் கல்முனை பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
சகோதரத்துவமும் நல்லிணக்கமும் எமது அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்ககிறார்கள்.பிட்டும் தேங்காய் பூவும் என இணை மொழி பேசுகிறார்கள். ஆனால் மறுபுறத்தே தமிழர்களின் இருப்பையும் நிலத்தையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் அரங்கேறி வருகின்றார்கள்.
எமது தமிழ் சமூகத்துக்கெதிராக கல்முனையில் இவ்வாறான விடயங்கள் அரங்கேறி அம்பலமாகின்ற போது எமது அரசியல்வாதிகள் கண்டும் காணாது வாயடைத்து மௌனம் காப்பது ஏன் ?கடந்த ஒன்றரை மாதங்களில் கல்முனையில் நடந்த அத்துமீறல்கள்
- கல்முனை மாநகர சபைக்கு கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆணையாளர் தமிழர் என்ற ஒரே காரணங்களால் தடுக்கப்பட்டு பின்னர் இடம்மாற்றப்பட்டார். தற்போது அந்த பதவிக்கு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- கல்முனை மயானத்தை அண்டிய அரச நிலத்தை, மாகாண ஒப்பந்த காரர் அலுவலகத்துக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சொந்த நிலம் அற்ற நிலையில் சுமார் 700க்கும் அதிகமான குடும்பங்கள் அநாதரவாக இருக்கையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அரச நிலங்களை வேறு தேவைக்கு பயன்படுத்த முனைந்தமை. இது பற்றிய அறிவுறுத்தல் வடக்கு பிரதேச செயலக செயலாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதா? இல்லயா?முறையான அனுமதிகள் பெறப்பட்டதா?
- கல்முனை காணி பதிவு கச்சேரியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட பதிவு புத்தகம் நீக்கப்பட்டு, கல்முனை வடக்கு பிரதேச செயலக நில புலங்களை கல்முனை பிரதேச செயலக பிரிவின் கீழ் கொண்டுவந்தமை.
- கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் நிர்வகிக்கப்படும்
- கல்முனை 01 கிராம சேவகர் பிரிவு, கல்முனை 01 MD ஆக மாற்றப்பட்டமை.
- பாண்டிருப்பு 01 கிராம சேவகர் பிரிவு மருதமுனை 06 கிராம சேவகர் பிரிவாக மாற்றப்பட்டமை.
- சேனைக்குடியிருப்பின் ஒரு பகுதி நட்பிட்டிமுனை MD ஆக மாற்றப்பட்டமை.
இவை கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ளதாக இலங்கை நில அளவை திணைக்களம் அவர்களது இணைய தளத்தில் பிரசுரித்தமை.
- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கீழ் உள்ள கல்முனை 01 கிராம சேவகர் பிரிவில் உள்ள அரச காணிகளை கல்முனைக்குடியை சேர்ந்த சில முஸ்லிம்கள் உரிமை கோரி காணி அபகரிப்பு செய்ய முற்பட்டமை.