நாட்டில் 70 வீதம் என்ற அளவில், புதுப்பிக்கப்பட்ட மின்சார உற்பத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்று அடிப்படையில் பாரளுமன்றில் முன்வைக்கப்பட்ட மின்சக்தி திருத்தச்சட்ட மூலம் நாடாளுமன்றில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாரளுமன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 36 வாக்குகள் செலுத்தப்பட்டன. 13 பேர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.