யாழ்ப்பானத்திற்கு வந்த இந்திய அரசின் உணவுப்பொருட்களை கொண்ட புகையிரதம் !

இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான இரண்டாம் கட்ட உணவுப்பொருட்களைக் கொண்ட புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இன்று காலை கிடைக்கப்பெற்ற இவ் உதவிப் பொருட்களானது 11 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகக் குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் முதல்கட்டமாக மே 30ம் திகதி யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *