காணாமற்போன ரோஹித்த ராஜபக்சவின் பூனை கண்டுபிடிப்பு!

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்சவின் பூனை ஒன்று காணாமல் போனதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

குறித்த பூனை இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பூனை அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிசங்க சேனாதிபதி, ரோஹித்த ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் வசிப்பதுடன் அவரது வீட்டில் 35 பூனைகள் வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

ரோஹித்தவின் பூனை இறுதியாக பெத்தகான பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. அந்த பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பலர் இதற்கு பதிலளித்திருந்தனர். எனினும், தற்போது பூனை கிடைத்துள்ளது.

ரோஹித்த ராஜபக்சவின் இந்த பூனையின் விலை சுமார் 3 ஆயிரம் டொலர்கள் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply