கொரோனா தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று (25) கொரோனா தொற்றால் 48 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,147 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களில் 30 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *