
மின்சார திருத்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் தேசிய மின்கட்டமைப்புக்கு செலவு குறைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையர்களுக்கு குறைந்த செலவில் எரிசக்தியை உறுதி செய்வதில் இந்த மசோதா ஒரு முக்கியமான படியாகும் என்று பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.