
கொழும்பு, ஜூன் 10:
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் குழு, இலங்கையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவானது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.
முன்னதாக கடந்த மாதம், இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இணையவழியில் தொழில்நுட்பக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.