சீரியா மனித பேரவலத்திற்கு பெயர் குறிப்பிடக்கூடிய ஒரு நாடு.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு வரை இடம் அரசியல் குழப்பம் மற்றும் இராணுவ நடவடிக்கை என்பவற்றினால் ஏராளமான மனித உயிர்கள் அழிக்கப்பட்டதை வரலாறு இன்றும் நினைவு கூறுகின்றது.
இநநிலையில் சிரியாவில் இறந்த மனித உடல்களுக்கு குழி வெட்டிவர்களில் ஒருவர் அமெரிக்க செனட் சபையில் உண்மை வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தன்னுடைய பெயரை குறிப்பிட விரும்பாத அந்நபர், குறிப்பிடும் போது “உடல் முழுவதும் கறுப்பு துணியால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், தலை, முகம் என்பவற்றையும் கறுப்பு துணியால் மூடவேண்டும் என்பதும் எமக்கு கொடுக்கப்பட்ட கட்டளை.
ஒரு கிழமைக்கு இரண்டு தடவைகள் மூன்று பெரிய ட்ரக் வண்டிகளில் சுமார் மூந்நூறு தொடக்கம் அறுநூறு வரையிலான இறந்த மனித உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு கொண்டு வரப்படும்.
அதேவேளை மேலும் சிறு சிறு வண்டிகள் மூலம் முப்பது தொடக்கம் நாற்பது வரையிலான சித்திரவதை மூலம் கொல்லப்பட்ட மனித உடல்கள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட மனித உடல்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது சுமார் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீரியாவில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் வன்முறைகளினால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் கடந்த 2011ம் ஆண்டு, தற்போதைய அதிபர் அல்-அசாத் ற்கு எதிராக அமைதியான போராட்டமாக உருவாகி பின்னர் பாரிய உள்நாட்டு போராக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உண்மை வாக்கு மூலம் அளித்த அந்நபர், இந்த நிலையில் தமக்கும் மரண அச்சுருத்தல் சிரிய இராணுவத்தினால் விடுக்கப்பட்டதாகவும், இராணுவம் ஏதாவது எம்மிடம் கேட்டால், நாம் தெரியாது என்ற பதிலைத்தான் சொல்ல வேண்டும். தெரியும் என்று சொல்லிவிட்டால் அடுத்து நாம் உயிருடன் இருக்க முடியாது. என்ற சூழலில் நானும் தனது குடும்பமும் நாட்டை விட்டு தப்பி ஓடி வந்ததாக தனது மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் மேற்படி உண்மை வாக்கு மூலத்தை அமெரிக்க செனட் சபையில் பதிவு செய்திருந்தார்.
பிற செய்திகள்




