வீட்டில் தனித்திருந்த 64 வயது மூதாட்டி பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருபனாவ பகுதியில் நேற்று முன்தினம் (8) இந்த சம்பவம் நடந்தது.
வீடு புகுந்த 30 வயதான திருடன், தனித்திருந்த 64 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதுடன், வீட்டிலிருந்த ரூ.25,000 பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.
சந்தேகநபர் கைதாகியுள்ளார். அவர் திருமணமாகாதவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிசார் தெரிவித்தனர்
பிற செய்திகள்