நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையிடம் கையிருப்பில் உள்ள 43 ஆயிரம் மெட்ரிக் டொன் நெற்தொகையினை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நெல்லை அரிசியாக, சதோச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில்,அரிசியின் விலை அதிகரித்துள்ளதுடன், தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், அனைத்து அரிசி வகைகளும் 230 முதல் 270 ரூபாய் வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில், சதோச ஊடாக சராசரியான விலையில் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.
இதேவேளை, நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையிடம் உள்ள 43 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல் ஊடாக, 32 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசி பெற்றுக்கொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்