
கொழும்பு, ஜுன் 10
பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பான அனுதாபப் பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது