வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதென படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும், படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு அந்த சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருவதால் ஏற்படும் நெரிசல் நிலையைக் குறைப்பதற்காக, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த மென்பொருளானது, சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்