
சென்னை, ஜுன் 10
திருகோணமலையைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் அவரை விசாரணைக்காக மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி வந்ததோடு அவர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைய வந்தாரா? அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல தனுஷ்கோடி தீடை பகுதிக்கு சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீடை பகுதிக்கு சென்றாரா? என பல்வேறு கோணங்களில் மரைன் பொலிஸார், கியூ பிரான்ச் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
எனினும் குறித்த நபர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு பொலிஸார் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.