
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற பல நாள் கலன்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சீராக தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நேற்று முன்தினம் கடலுணவு ஏற்றுமதியாளர்களை சந்தித்து எரிபொருள் கொள்வனவிற்கு தேவையான டொலர்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடிய நிலையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவன அதிகாரிளுடன் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்
இலங்கை மக்கள் தொகையில் 22% உணவு உதவி தேவை- ஐ.நா விசேட அறிக்கை!
அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்;பசிலுக்கு ஜெயசூரியா ஆலோசனை!
இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை! லிட்ரோ அறிவிப்பு