முன்னாள் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஏதேனும் சட்டச் சிக்கலில் மாட்டி பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.
மேலும் தெரியவருகையில்,
முன்னாள் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஒரு காலத்தில் சரத் பொன்சேகாவை விட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.
ஆனால் ஜனாதிபதியின் மிரிஹானை வீடு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின் கோட்டாபயவுக்கு பிடிக்காதவர்கள் பட்டியலில் முதலிடத்தில் தற்போது இருப்பவரும் அவர்தான்.
அன்றைக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ராணுவத்தைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்த வாய்மூல உத்தரவு விடுக்கப்பட்ட போதும் , சவேந்திர சில்வா அதனை கண்டும் காணாதது போல கடந்து சென்றுள்ளார்.
காரணம், அவ்வாறு செய்தால் சர்வதேச ரீதியாக தனது மரியாதை கெட்டுப் போகும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
அதன்படி, அடுத்த தேர்தல் ஒன்றின் மூலம் முக்கிய பொறுப்பு ஒன்றுக்கு குறிவைத்து செயற்பட்டு வரும் சவேந்திர சில்வா, அண்மைக்காலமாக ஆட்சியாளர்கள் விடுத்த சட்டவிரோத உத்தரவுகளை அலட்சியப்படுத்தியதன் காரணமாக தற்போது ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளாகி இருக்கின்றார்
அதன் காரணமாக மிக விரைவில் சவேந்திர சில்வா ஏதேனும் சட்டச் சிக்கலில் மாட்டி பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றே குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்