யாழ், ஜுன் 10
இந்துக்களின் போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – கொழும்பு இந்துக் கல்லூரி அணிகள் மோதும் பெருந் துடுப்பாட்ட போட்டி இன்று வெள்ளிக்கிழைமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
11 ஆவது தடவையாக இரு கல்லூரிகளும் மோதும் இந்தப் போட்டி இன்றும் நாளையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 1982ஆம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் மாபெரும் போர், முதன்முறையாக இந் துக் கல்லூரி – கொழும்பு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இறுதியாக, கடந்த 2019 இல் சரவண முத்து சர்வதேச மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் கொழும்பு இந்துக் கல்லூரி வெற்றி பெற்றிருந்தது. பின்னர் அசாதாரண சூழ்நிலைகளால் கடந்த இரண்டு வருடமாக தடைப்பட்டிருந்த இந்தப் போட்டியானது மீண்டும் இந்த வருடம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
முன்னதாக நடந்து முடிந்த 10 போட்டிகளில் நான்கில் கொழும்பு இந்துக் கல்லூரியும் ஒரு போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியும் வென்றுள்ளன. ஏனைய ஐந்து போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன என்பது குறிப் பிடத்தக்கது.

