
கொழும்பு, ஜன் 10
அரசாங்க உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு அவர்களின் சேவை அனுபவம் மற்றும் ஓய்வூதியத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சம்பளமில்லாத விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் அடங்கிய சுற்று நிருபமொன்று வெளியிடுவதற்கான அமைச்சரவைப்பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவையில் சமா்ப்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் பதவிக் காலத்தில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் எனவும், இதனால் அந்த உத்தியோகத்தரின் சேவை மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாது எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.