ரிஷாட்டின் வீட்டிலிருந்த ஏனைய சிறுமிகள் எங்கே? விரைந்தது விசேட குழு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அழைத்து வந்த ஏனைய சிறுமிகள் எங்கு இருக்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயிரிழந்த 16 வயது ஹிஷாலினியின் வசிப்பிடமான டயகம பகுதிக்கு விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினருக்கு வேலை செய்வதற்காக 11 சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு சில வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் கடமையாற்றிய 22 வயது யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *