
புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து புதிய அமைச்சரவை நியமனம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகே நியமனம் வழங்கப்படும் எனவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை 30-40 வரையான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பிக்கள் நால்வருக்கும்இ பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை சஜித் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அரசில் இணைந்து இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிறசெய்திகள்
அண்ணன் வெளியேற சபைக்கு வந்த தம்பி!( படங்கள் இணைப்பு)
அத்துகோரள படுகொலைச் சம்பவம் ; ஆளுந்தரப்பு சபையில் கவனயீர்ப்பு!(படங்கள் இணைப்பு)
கல்வி அமைச்சருடன் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு!
அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்;பசிலுக்கு ஜெயசூரியா ஆலோசனை!