
சமுர்த்திப் பயனாளிகளை மீளாய்வு செய்யுமாறு யாழ் அரச அதிபரிடம் கோரிக்கை!
யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்குமாறு யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமது வாகனங்களுக்கான எரிபொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வீடுகளில் பதுக்கிவைத்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ள நிலையில், ஒரு றாத்தல் பாண் வாங்க முடியாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சமுர்த்திப் பயனாளிகளாக உள்வாங்கப்படாமல் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களில் 70 வீதமானவர்கள் உயர் வருமானம் பெறும் தகுதியற்ற குடும்பங்கள் என, மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பொது வெளியில் தெரிவித்துள்ளமையை மேற்கோள் காட்டி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் யாழ் அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.