மகளிர் – சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த பவித்ரா வன்னியாராச்சி புதிய அமைச்சரவையில் உள்வாங்கப்படவில்லை.
ஜனாதிபதியினால் இரண்டு புதிய அமைச்சுப் பொறுப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ நேற்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
குறித்த வெற்றிடத்திற்கு பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, இவ்வாறு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்