சரம் திருடியவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு..!

காலி – இமதுவ நகரில் புடவை கடை ஒன்றில் 21ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 12 சரங்களை திருடிய சம்பவத்தில், சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன்படி குறித்த நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்று நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு குறித்த சந்தேகநபர் கடந்த சிங்கள தமிழ் புத்தாண்டின் போது துணி வாங்கும் போர்வையில் கடையொன்றுக்குள் சென்று 12 சரங்களையும் எடுத்துள்ளார்.

மேலும் இதன் பின்னர் உடைமாற்றும் அறைக்கு சென்று அனைத்து சரங்களையும் தமது கால்களில் கட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், குறித்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காணொளிகள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *