
கொழும்பு, ஜூன் 10
பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா தனது வர்த்தக நிறுவன செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தனது அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர் சபை பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான தனது விருப்பத்தை பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.